முதியவரை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை!
தேவகோட்டை: கண்ணங்குடி அருகே வளையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா ( வயது 68 ) என்ற விவசாயியை அர்ஜுனன் ( 45 ) என்பவர் 2015 ஆம் ஆண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மணல் கடத்தல் புகார் கூறியதாக தவறான சந்தேக அடிப்படையில் இவ்வாறு நடந்தாக தெரியவந்தது. சுப்பையா கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் வயதான முதியவரை தாக்கிய அர்ஜுனனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை தேவகோட்டை நீதிமன்றம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.