தேவகோட்டை செய்தி எனும் பெயரில் இணையம் ஆரம்பித்துள்ளேன். இணையம் வழியாக செய்திகள், மீரா டிவி எனும் பெயரில் காணொலி மூலம் தமிழ் மக்களுக்கு இசை, பயனுள்ள உரைகள் வழங்க ஆசை ! நேயர்களாகிய உங்கள் அன்பும் ஆதரவும் தேவை !
- ஜே.எம்.
காரைக்குடி பொன் நகர் பகுதிக்கு சாலை வசதி தேவை!
காரைக்குடி அருகே பொன் நகர் ( இலுப்பக்குடி ) பகுதி வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொன் நகர் சாலை கிழக்கு - மேற்கு பகுதி தெருக்கள் பல தார் சாலை போடப்படாமல் கார்கள், லாரிகள், பள்ளி பேருந்துகள் வந்து செல்வதால் மண் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே உள்ளாட்சி நிர்வாகம் உரிய சாலை வசதிகள் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரி வருகிறார்கள்.
Comments
Post a Comment